உலகம்

கப்பல்களில் மின்காந்த ஏவுதல் அமைப்பிற்கு மாறாக பாரம்பரிய நீராவி விசைக்கு மாற ட்ரம்ப் உத்தரவு

  • August 14, 2026
  • 0 Comments

அமெரிக்கக் கடற்படை தனது மேம்பட்ட மின்காந்த ஏவுதல் அமைப்பைக் கைவிட்டு பாரம்பரிய அமைப்பை பின்பற்ற வேண்டும் என ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது பாரம்பரிய முறையான நீராவி விசை உந்துவிசைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கமைய யுஎஸ்எஸ் டோரிஸ் மில்லரில் USS Doris Miller தொடங்கி, இந்தத் தொழில்நுட்பத்தை அகற்றுவதற்கான திட்டங்களை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பென்டகனும் கடற்படையும் வலியுறுத்துகின்றன. எவ்வாறாயினும் இந்த அமைப்பைத் தயாரிக்கும் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனம், கப்பலின் […]

ஐரோப்பா

கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த உக்ரைன் இணக்கம்

  • August 8, 2026
  • 0 Comments

சமீபகாலமாக கருங்கடலில் ரஷ்ய கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நடவடிக்கையானது ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நடவடிக்கையானது கருங்கடல் பகுதியில் பயணிக்கும் வேறு நாடுகளின் கப்பல்களுக்கும் ஆபத்தாக மாறியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா அல்லாத எண்ணெய் கப்பல்களையும் கருங்கடல் உள்கட்டமைப்புகளையும் குறிவைக்க வேண்டாம் என உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி வர்த்தகக் கப்பல் உரிமையாளர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் தொடர்பு மையங்களை […]

உலகம்

தெஹ்ரான் கப்பல்களை குறிவைத்தால், அமெரிக்கா மின் கட்டமைப்புகளை குறிவைக்கும்

  • July 22, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் கப்பல்களை குறிவைத்தால், அமெரிக்கா ஈரானின் பாலம் அல்லது மின் கட்டமைப்பு அமைப்பை  தாக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசு ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏவுகணை, ரொக்கெட், ட்ரோன் அல்லது வேறு எந்த சாதனம் அல்லது ஆயுதம் மூலமாக   கப்பலைத் தாக்கும் போதெல்லாம், அமெரிக்கா தெஹ்ரானுக்கு அருகில் அல்லது உள்ளே அமைந்துள்ள பாலம், மின்கட்டமைப்புகளை குண்டு […]

உலகம்

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : ஹோர்மூஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த கப்பல்கள்!

  • May 20, 2026
  • 0 Comments

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் “இறுதிக் கட்டத்தில்” இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஹோர்மூஸ் ஜலசந்தியை  03 எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பதாக கடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனக் கப்பல்களுக்கான விதிகளைத் தளர்த்துவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் எட்டியதைத் தொடர்ந்து, சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான சீன எண்ணெய்க் கப்பல்கள்  ஜலசந்தியில்  இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. சீனக் கப்பல்களுடன் இணைந்து கொரிய […]