ஐரோப்பா

எல் நினோ நிகழ்வு – பெருந்தொற்று அளவிலான மரணங்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கை

முன்னெப்போதும் இல்லாத எல் நினோ நிகழ்வானது, பெருந்தொற்று அளவிலான இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இது 2026 மற்றும் 2027-க்கு இடையில் உலகளவில் 450,000-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நவீன காலநிலை பதிவுகளில் கேள்விப்படாத ஒன்று என இந்த நிகழ்வை வானிலை ஆய்வு மையம் விவரித்துள்ளது.

பசிபிக் கடல் வெப்பநிலை ஏற்கனவே நீண்டகால சராசரியை விட 3°C-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய வானிலை முறைகள் கடுமையாக சீர்குலைந்து வருகின்றன என்றும் இதன் விளைவாக பருவமழை குறைவடைந்து ஆசிய பகுதிகளை கடும் வெப்பம் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இங்கிலாந்தில் இலையுதிர் காலம் முழுவதும் புயல் மற்றும் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், காபி, சாக்லேட் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் விலைகள் உயரவும் வாய்ப்புள்ளது எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்