கார்களில் படிந்துள்ள பனியை நீக்கும் முறை – பிரித்தானியர்களுக்கு அவசர அறிவிப்பு
பிரித்தானியாவில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ள நிலையில் வாகன சாரதிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களின் வாகனங்களில் படிந்துள்ள பனியை தவறாக நீக்கும் ஓட்டுநர்களுக்கு 1000 பவுண்ட்ஸ் வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரப்பிங் ஆல்கஹால் மற்றும் தண்ணீரின் வெதுவெதுப்பான கலவையைத் தெளிப்பதால் கண்ணாடிகளில் விரிசல் விலாமல் பாதுகாப்பாக பனியை அப்புறப்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு காரின் உள்ளக பனி நீக்கும் அமைப்பைப் பயன்படுத்துவது, கண்ணாடியை உள்ளிருந்து உருக்குவதற்காக அதைச் சூடாக்குகிறது. இருப்பினும், இந்த முறைக்கு அதிக நேரமும் எரிபொருள் ஆற்றலும் தேவைப்படுகிறது.
ஆகவே மாற்று முறையாக பனிக்கட்டிகளை உடைக்க ஐஸ் ஸ்கிரேப்பரைப் பயன்படுத்துவது அல்லது சூரிய ஒளியால் பனியை இயற்கையாக உருக வைக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




