உலகம் செய்தி

மரணத்துக்கு அல்ல, மனித வாழ்வுக்கு நிதி ஒதுக்குங்கள்

காலநிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் ஏழை நாடுகள், அவசர நிதியுதவி கோரியுள்ள போதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் COP31 காலநிலை மாநாட்டில் அதற்குப் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் ஏழை நாடுகள், அவசர நிதியுதவி கோரியுள்ள போதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் COP31 காலநிலை மாநாட்டில் அதற்குப் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய நிதியுதவியை அதிகரிப்பதாக வளர்ந்த நாடுகள் ஏற்கனவே உறுதியளித்திருந்தன. எனினும், அந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச நிதியுதவிப் பின்வாங்கல், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு போர்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் இராணுவச் செலவுகள் காரணமாக காலநிலை நிதிக்கு முக்கியத்துவம் குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், இயற்கை அனர்த்தங்களால் அதிகம் பாதிக்கப்படும் சிறிய தீவு நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகள் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

“போர்களுக்கான செலவுகள் அதிகரிக்கின்றன. ஆனால், காலநிலை மாற்றம் போன்ற மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளப் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. மரணத்துக்காக அல்ல, மனித வாழ்வுக்காக நிதியை ஒதுக்குங்கள்” என மார்ஷல் தீவுகளின் ஜனாதிபதி ஹில்டா ஹெய்ன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், புதிய நிதி இலக்குகளை அறிவிப்பதை விட, ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி