இந்தியா செய்தி

இந்தியா அசாமில் கோர விபத்து: 23 பேர் பலி

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காசிரங்கா பகுதியில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காசிரங்கா பகுதியில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து வியாழக்கிழமை (12) காசிரங்காவுக்கு அருகிலுள்ள ரோங்காஜான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினமே இது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

போகாகாட்டிலிருந்து நாகோன் நோக்கிப் பயணித்த சிறிய பயணிகள் பேருந்து ஒன்றின் மீது எதிர்த் திசையில் வந்த லொறி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மோதலின் தாக்கத்தால் பேருந்து பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் கோஹோரா மாதிரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி