பிரான்ஸில் பல்பொருள் அங்காடிகள் சைபர் மீதான தாக்குதல் – பின்னணியில் சீனா உள்ளதா?
பிரான்ஸில் பல்பொருள் அங்காடிகளை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட சைபர் தாக்குதல்களில் சீன செயற்கை நுண்ணறிவு மாதிரி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் Scott Bessent தெரிவித்துள்ளார்.
ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனில் Heritage Foundation இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இஇதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அது ஒரு சீன மாதிரி கருவி என்றும், ஈரானியர்கள் அவ்வாறான கருவிகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரான்சில் நடந்த இந்த ஹேக்கிங் தாக்குதல்கள் சுமார் 700 பல்பொருள் அங்காடிகளையும், அந்நாட்டின் பொது இரத்த வங்கியையும் பாதித்தன.
இதனால், மளிகை மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சேதமடைந்த உணவுகளை அகற்றியதுடன், பெரும் நஷ்டத்தையும் சந்தித்தனர்.
இந்நிலையில் இந்த மாபெரும் சைபர் தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள வெளிநாட்டு சதி தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக ஜனாதிபதி மக்ரோன் நேற்று அறிவித்திருந்தார்.
பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் மீது குற்றம் சாட்டினார்.
இருப்பினும் அவர் எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில் தற்போது அமெரிக்க கருவூலச் செயலாளரான ஸ்காட் பெசென்ட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.




