பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – 1100 ஹெக்டேர் நிலப்பரப்பு நாசம்
தென்மேற்கு பிரான்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது.
அப்பகுதியிலிருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரான்சின் 75 பிராந்தியங்களுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், மேற்கு ஜெர்மனியிலும் காட்டுத்தீ காரணமாக 2,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




