கிரீஸில் ஒரேநாளில் 70இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவல்
கிரீஸில் நேற்று 70 இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள சில பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவியதாகவும், இதனால் அந்த பகுதிகளில் இருந் மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைப்பதற்காக அதிகாரிகள் நீர் குண்டு வீசும் விமானங்களை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரேக்க தீயணைப்புப் படை அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது.




