காட்டுத்தீ மற்றும் வெப்பத்தில் வாழ்நாளைக் கழிக்கும் குழந்தைகள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பா, உலக சராசரியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது.
இதனால் ஐரோப்பாவின் பெரும்பகுதி நீண்ட கால வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐரோப்பாவின் வேகமான வெப்பமயமாதல் இளைய தலைமுறையினருக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வ்ரிஜே யுனிவர்சிடேட் ப்ருஸ்ஸலின் Vrije Universiteit Brussel புதிய ஆராய்ச்சி எச்சரித்துள்ளது.
Environmental Research Letters என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தற்போதைய காலநிலை கொள்கைகளை நாம் தொடர்ந்தால், 1950-ல் பிறந்த ஒருவருடன் ஒப்பிடும்போது, 2025-ல் ஐரோப்பாவில் பிறக்கும் ஒரு குழந்தை கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமான தீ வானிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
“ஐரோப்பாவில் இப்போது பிறக்கும் ஒரு குழந்தை, தனது வாழ்நாளில் மேலும் பல ஆண்டுகளை தீவிரமான தீ வானிலை நிலைகளின் கீழ் கழிக்க நேரிடும், மேலும் மத்திய தரைக்கடல் முழுவதும் அந்தச் சுமை குறிப்பாக அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




