பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – 500 பேர் கைது
பிரான்ஸில் காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் வேண்டுமென்றே தீ மூட்டியதாகவும், மீதமுள்ளவர்கள் தற்செயலாக அவ்வாறு செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள்.
ஜூலை மாதம் போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை குரோஷியாவின் விடுமுறைத் தளமொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்ட நிலையில், 40 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 1,200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், கண்டம் முழுவதும் “மிகவும் தீவிரமான” காட்டுத்தீ நிலைமைகள் பரவியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
மேலும் ஜெர்மனி மற்றும் தென்மேற்கு பிரான்சில் உள்ள கிராமங்களிலிருந்து மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பெல்ஜியத்தின் மிகப்பெரிய இயற்கை காப்பகமான ஹை ஃபென்ஸில், தீ பரவிய நிலையில், லீஜ் மாகாணத்தில் வசிப்பவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர்.




