பிரித்தானியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் விமான தளம் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கும், தமது நாட்டுக்கும் தொடர்பு இல்லை என லண்டனிலுள்ள ஈரான் தூதுவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி: ஈரான் மறுப்பு

  • September 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் விமான தளம் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கும், தமது நாட்டுக்கும் தொடர்பு இல்லை என லண்டனிலுள்ள ஈரான் தூதுவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவிக்கையில், “சந்தேகநபர்கள் பாரிய சேதத்தை ஏற்படுத்தவே திட்டமிட்டிருந்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் குறித்துப் கருத்துத் தெரிவித்த பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting), “ஈரானும் அதன் ஆதரவு அமைப்புகளும் நமக்குத் தீங்கு விளைவிக்க விரும்புவதை நாம் அறிவோம். எமது ஜனநாயகத்தை […]

பிரித்தானியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் விமானத் தளத்தை நோக்கி வெள்ளை நிற வேன்களில் செல்ல முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாதம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான சட்டங்களின் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானியாவிலுள்ள அமெரிக்க படைத்தளம் குறிவைப்பு: விசாரணை தீவிரம்

  • September 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் விமானத் தளத்தை நோக்கி வெள்ளை நிற வேன்களில் செல்ல முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாதம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான சட்டங்களின் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கைது செய்யப்பட்ட ஐவரும் லண்டனைச் சேர்ந்த 23 முதல் 25 வயதுக்குட்பட்ட பிரித்தானியப் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கப் போர் விமானங்களின் தளமாகச் செயல்படும் RAF Fairford இராணுவத் தளத்திற்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியிலுள்ள […]

"பயங்கரவாதத்திற்கு எதிரான எந்தவொரு தாக்குதலையும் நடத்த இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது" என பாகிஸ்தானுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா செய்தி

எந்தவொரு தாக்குதலுக்கும் தயார்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

  • September 28, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்திற்கு எதிரான எந்தவொரு தாக்குதலையும் நடத்த இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது” என பாகிஸ்தானுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் நொய்டா நகரில் நேற்று தனியார் செய்தி நிறுவனம் சார்பில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமது உரையில் கூறியவை வருமாறு, “இந்தியா அமைதியை விரும்புகிறது,  ஒருபோதும் போரை விரும்பியதில்லை. உலகின் எந்தவொரு நாட்டின் […]

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் (Aichi-Nagoya) நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம்

  • September 28, 2026
  • 0 Comments

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் (Aichi-Nagoya) நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் (Glasgow Commonwealth Games) அவர் வென்ற தங்கப் பதக்கத்தைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டில் அவர் வசப்படுத்தும் மற்றுமொரு முக்கிய சர்வதேசப் பதக்கமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. ஆடவர் ஈட்டி எறிதலில் தற்போது உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ருமேஷ் தரங்க, […]

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிலையை வலுக்கட்டாயமாக அகற்றிய பொலிஸாரின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கில் இன்று திங்கட்கிழமை மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கை செய்தி

அகற்றப்பட்ட திலீபனின் சிலையை மீள நிறுவுமாறு வலியுறுத்தி போராட்டம்

  • September 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிலையை வலுக்கட்டாயமாக அகற்றிய பொலிஸாரின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கில் இன்று திங்கட்கிழமை மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டின் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன. இதற்கமைய, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவாலயம் முன்பாக இன்று பிற்பகல் மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் காணாமல் […]

இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான கடற்றொழில், கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியன் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கிடையில் இன்று (28.09.2026) கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை செய்தி

ஆழ்கடல் மீன்பிடி: ரஷ்ய தொழில்நுட்பட உதவியை நாடும் இலங்கை

  • September 28, 2026
  • 0 Comments

இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான கடற்றொழில், கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியன் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கிடையில் இன்று (28.09.2026) கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சிநேகபூர்வமான சந்திப்பின்போது, இலங்கையின் கடல்சார் உற்பத்திகளுக்கான ரஷ்ய சந்தை வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இலங்கையின் கடல்சார் உற்பத்திகளான டுனா, இறால் […]

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் - என்று மகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார். இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு மன்னிப்புகோரி பௌத்த பிக்குகள் களத்தில்

  • September 28, 2026
  • 0 Comments

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் – என்று மகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிகாலத்தில் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மன்னிப்பு வழங்கப்பட்ட விதம் […]

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. செய்தி விளையாட்டு

15 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து விராட் கோலி சாதனை

  • September 28, 2026
  • 0 Comments

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் சதம் விளாசிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயித்த 296 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்தியா 50 பந்துகள் மீதமிருக்கையிலேயே எட்டியது. விராட் கோலி 88 பந்துகளில் 139 […]

2026-27 UEFA நெஷன்ஸ் லீக் (UEFA Nations League) தொடரில் பிரான்ஸ் அணிக்கு அதன் தலைவர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) வெற்றிகரமான தொடக்கத்தைப் பெற்றுத்தந்த போதிலும், ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக திங்கள்கிழமை பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி விளையாட்டு

காயத்தால் விலகிய எம்பாப்பே: பிரான்ஸுக்குக் காத்திருக்கும் கடும் சவால்

  • September 28, 2026
  • 0 Comments

2026-27 UEFA நெஷன்ஸ் லீக் (UEFA Nations League) தொடரில் பிரான்ஸ் அணிக்கு அதன் தலைவர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) வெற்றிகரமான தொடக்கத்தைப் பெற்றுத்தந்த போதிலும், ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக திங்கள்கிழமை பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கிக்கு எதிரான தொடக்க போட்டியில் எம்பாப்பே அடித்த கோலால் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்ற நிலையில், போட்டிக் காலத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பிரான்ஸ் அணியின் முன்னணி […]

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யப்படும் 60 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கான வரியைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வர்த்தகப் போரில் திடீர் திருப்பம்: வரி குறைப்புக்கு அமெரிக்கா, சீனா இணக்கம்

  • September 28, 2026
  • 0 Comments

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யப்படும் 60 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கான வரியைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. அமெரிக்கச் சோளம் முதல் அழகுசாதனப் பொருட்கள் வரையிலும், சீனாவின் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் பொம்மைகள் வரையிலும் பரந்தளவிலான பொருட்களுக்கு இவ்வரிவிலக்கு அளிக்கப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தூதரக அளவில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், உணர்திறன் அற்ற (Non-sensitive) 30 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகப் பொருட்களுக்குச் சாதகமான வரிச் சலுகைகளை வழங்க […]