யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை வெளிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பூசாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: பூசகர் பலி

  • September 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை வெளிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பூசாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், அப்பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பூசாரியின் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் இருந்து பூசாரி வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவருக்குப் பின்னால் வந்த பட்டா ரக வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதனால் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்த பூசாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ஆரம்பம்

  • September 28, 2026
  • 0 Comments

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (செப். 28) முறைப்படி தொடங்கி வைத்தார். மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை வளாகமும் விழாக்க கோலம் பூண்டிருந்தது. முதல்கட்டமாக மும்மதங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பயனடைந்த தாய்மார்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய், பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க பல குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தார். […]

ஜெர்மனியில் அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரிக் கட்சிகள் ஈட்டிய வெற்றிகளைத் தொடர்ந்து, ரஷ்யா அல்லது குற்றக் கும்பல்களுக்கு ரகசியத் தகவல்கள் கசியக்கூடும் என்பதால் பாதுகாப்பு அமைப்புகளின் ரகசியத் தகவல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஜெர்மனியின் உளவுத் தகவல்கள் ரஷ்யாவின் கைகளுக்குள் செல்லும் அபாயம்

  • September 28, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரிக் கட்சிகள் ஈட்டிய வெற்றிகளைத் தொடர்ந்து, ரஷ்யா அல்லது குற்றக் கும்பல்களுக்கு ரகசியத் தகவல்கள் கசியக்கூடும் என்பதால் பாதுகாப்பு அமைப்புகளின் ரகசியத் தகவல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி கிழக்கு மாநிலமான சாக்சனி-அன்ஹால்டில் (Saxony-Anhalt) கிட்டத்தட்ட முழுப் பெரும்பான்மையைப் பெறவிருந்த தீவிர வலதுசாரி ‘அல்டர்னேட்டிவ் பார் ஜெர்மனி’ (AfD) கட்சியினாலும், செப்டம்பர் […]

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கக் குறிப்பை அடுத்து, பாஜகவைச் சேர்ந்த 12 மாநில முதலமைச்சர்கள் தங்களது மாநிலங்களில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியா செய்தி

தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஆதரவாக பாஜக முதலமைச்சர்கள் களத்தில்

  • September 28, 2026
  • 0 Comments

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கக் குறிப்பை அடுத்து, பாஜகவைச் சேர்ந்த 12 மாநில முதலமைச்சர்கள் தங்களது மாநிலங்களில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ (INDIA) கூட்டணித் தலைவர்கள் அரசியல் சாசன நிறுவனங்களை அவமதிக்கும் சதியில் ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து வெளியிடுகையில், வாக்குகள் எதுவும் திருடப்படவில்லை, ராகுல் காந்தியின் மனம்தான் திருடப்பட்டுள்ளது” […]

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான ஜே.பி. நட்டா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

எதிரணிகள்மீது பாஜக தலைவர் பாய்ச்சல்

  • September 28, 2026
  • 0 Comments

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான ஜே.பி. நட்டா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் “அனைத்துப் பொய்களையும்” தேர்தல் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் சாடியுள்ளார். புதுடெல்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் பரிசீலிக்கப்பட்ட போது மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்றம் […]

அயர்லாந்து மற்றும் இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான நெஷன்ஸ் லீக் (Nations League) போட்டிக்கு முன்னதாக, இரு அணி வீரர்களுக்கும் இடையே எவ்வித கரம்பற்றுதல்களும் (Handshakes) இடம்பெறவில்லை. செய்தி விளையாட்டு

காசா விவகாரம்: இஸ்ரேல் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த அயர்லாந்து அணி

  • September 28, 2026
  • 0 Comments

அயர்லாந்து மற்றும் இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான நெஷன்ஸ் லீக் (Nations League) போட்டிக்கு முன்னதாக, இரு அணி வீரர்களுக்கும் இடையே எவ்வித கரம்பற்றுதல்களும் (Handshakes) இடம்பெறவில்லை. இப்போட்டியில் அயர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியதுடன், அயர்லாந்து வீரர்கள் கருப்புப் பட்டி அணிந்து விளையாடினர். காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அயர்லாந்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான இரு போட்டிகளையும் புறக்கணிக்குமாறு அயர்லாந்து வீரர்களுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, “அப்பாவி மக்கள் கொல்லப்படுவது […]

இலங்கையில் இருந்தபடி, துபாயில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தார் என சந்தேகிக்கப்படும் 26 வயது இளைஞர் ஒருவரை கம்பளை பொலிஸார் நேற்று (27) கைது செய்துள்ளனர். இலங்கை செய்தி

சினிமா படத்தையே மிஞ்சும் போதைப்பொருள் வியாபரம்: இலங்கை இளைஞன் கைது

  • September 28, 2026
  • 0 Comments

இலங்கையில் இருந்தபடி, துபாயில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தார் என சந்தேகிக்கப்படும் 26 வயது இளைஞர் ஒருவரை கம்பளை பொலிஸார் நேற்று (27) கைது செய்துள்ளனர். துபாயில் 04 வருடங்கள் பணிபுரிந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர், அங்கு தங்கியிருந்த காலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ‘கான் பாபு’ என்ற நபருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். கம்பளை மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த 26 வயதான குறித்த இளைஞர் இலங்கை வந்த பின்னர், துபாயில் பணிபுரியும் இளைஞர்களுக்கு போதைப்பெருள் […]

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ராஜபக்சக்கள் ஒருபோதும் மன்னிப்பு கோரப்போவதில்லை. அவர்களுக்கு இயற்கை நீதியை பெற்றுக்கொடுக்கும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மன்னிப்புகோரி அடிபணிய ராஜபக்சக்கள் தயாரில்லை – மொட்டு கட்சி

  • September 28, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ராஜபக்சக்கள் ஒருபோதும் மன்னிப்பு கோரப்போவதில்லை. அவர்களுக்கு இயற்கை நீதியை பெற்றுக்கொடுக்கும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியில் சவால்மிக்கவர்தான் நாமல் ராஜபக்ச. அதனால்தான் அவருக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.நீதித்துறையின் சுயாதீனம்மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சட்டரீதியாக போராடுவோம். நாம் சிங்கள, […]

“இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே அமுலில் இருக்க வேண்டும். வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நடத்துவது தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு வலிக்கின்றது.”- என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

இலங்கை சிங்கள, பௌத்த நாடு: திலீபனை நினைவுகூர முடியாது

  • September 28, 2026
  • 0 Comments

“இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே அமுலில் இருக்க வேண்டும். வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நடத்துவது தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு வலிக்கின்றது.”- என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ திலீபனுக்கு உருவச்சிலை வைத்து திலீபனுக்கு நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நடத்தப்படும்போது அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது? பயங்கரவாதி என்பவர் பயங்கரவாதிதான். அவரை அப்பாவியாக கருத முடியாது. […]

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முன்னாள் பிரீமியரான மைக்கேல் பெயர்ட், அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் (Cricket Australia) அடுத்த வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளார். செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபை தலைவர் ராஜினாமா

  • September 28, 2026
  • 0 Comments

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முன்னாள் பிரீமியரான மைக்கேல் பெயர்ட், அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் (Cricket Australia) அடுத்த வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளார். 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தலைவராகச் செயல்பட்டு வரும் பெயர்ட், பிக் பாஷ் லீக் (Big Bash League) கிளப்புகளைத் தனியார்மயமாக்கும் முயற்சியை முன்னெடுத்து நடத்தினார். இருப்பினும், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநில கிரிக்கெட் சபைகள் இந்தத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு […]