இலங்கை செய்தி

ஆழ்கடல் மீன்பிடி: ரஷ்ய தொழில்நுட்பட உதவியை நாடும் இலங்கை

இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான கடற்றொழில், கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியன் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கிடையில் இன்று (28.09.2026) கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான கடற்றொழில், கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியன் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கிடையில் இன்று (28.09.2026) கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சிநேகபூர்வமான சந்திப்பின்போது, இலங்கையின் கடல்சார் உற்பத்திகளுக்கான ரஷ்ய சந்தை வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இலங்கையின் கடல்சார் உற்பத்திகளான டுனா, இறால் மற்றும் நண்டு உள்ளிட்டவற்றை ரஷ்ய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதில் இலங்கை ஆர்வமாக இருப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அதேவேளை, ரஷ்ய சந்தைக்கு மீன் மற்றும் கடல்சார் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய சர்வதேச தரநிலைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சான்றிதழ் நடைமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான கடல்சார் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் காணப்படும் நடைமுறைச் சவால்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையின் ஆழ்க்கடல் மீன்பிடித் துறையை நவீனமயமாக்குவதற்காக ரஷ்யாவின் நவீன தொழில்நுட்பம், மீன்பிடிப் படகுகள் மற்றும் தேவையான உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.

குறிப்பாக, மீனவர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பிந்திய இழப்புகளைக் குறைத்து, மீன்பிடி உற்பத்திகளின் தரத்தைப் பாதுகாப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி. பீ.கே. கோலித்த கமல் ஜினதாசவும் கலந்துக் கொண்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை