இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு மன்னிப்புகோரி பௌத்த பிக்குகள் களத்தில்

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் - என்று மகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் – என்று மகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிகாலத்தில் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் மன்னிப்பு வழங்கப்பட்ட விதம் பிழையென தற்போது கூறப்படுகின்றது. இது அதிகாரிகள் பக்கத்தில் இழைக்கப்பட்டுள்ள தவறாகும்.

எனவே, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இதனைகோரி அனைத்து இன மக்களின் ஒரு கோடி கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு மனுவொன்றை கையளிக்கவுள்ளோம்.”- என்றார்.

அதேவேளை, பத்தமுல்ல சீலரத்தன தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள், கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை