காலநிலையின் கோரத் தாண்டவம்: காணாமல்போகும் அபாயத்தில் ஏரி
கிரீஸின் வடபகுதியில் அமைந்திருந்த கொரோனியா (Koroneia) ஏரி, கடும் வறட்சி தொடங்குவதற்கு முன்பாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு முக்கியமான ஈரநிலமாகத் திகழ்ந்தது. ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள், பூநாரைகள் (Flamingos), சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் புகலிடமாகவும் அது விளங்கியது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக நிலவும் குறைவான மழைப்பொழிவு மற்றும் அளவுக்கு அதிகமான நீர்ப்பாசனம் காரணமாக, ஒரு காலத்தில் கிரீஸின் ஐந்தாவது பெரிய ஏரியாக இருந்த கொரோனியா, தற்போது தன் பழைய அளவில் பத்தில் ஒரு […]













