யாழ்ப்பாணத்தில் 187 ஏக்கருக்கும் அதிகமான காணி விடுவிப்பு
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் அரச சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி, எதிர்கால பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாப்புப் படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த காணியை உற்பத்திப் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை மேற்கு, கிராம உத்தியோகத்தர் பிரிவு J/233 இல் அமைந்துள்ள குறித்த காணி, 1997ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறித்த காணியை […]













