இலங்கை செய்தி

யாழில் இளம் குடும்பப் பெண் கொலை: தீவிர விசாரணை முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தடயவியல் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தடயவியல் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நல்லூர் கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து , சமையல் கலைஞரான ஒரு பிள்ளையின் தாயாரைக் கத்தியால் வெட்டிக் படுகொலை செய்துவிட்டு, தாயாரையும் காயப்படுத்திவிட்டுத் தப்பியோடிய இளைஞர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமையல் கலைஞரான ஆன் லக்ஷா இக்னேஷியஸ் (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரைக் கொலை செய்த பின்னர் ரயில் முன்பாய்ந்து உயிரை மாய்த்தவர் கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புகழரசன் (வயது 23) என்ற இளைஞராவார்.

நேற்று திங்கட்கிழமை இரவு நல்லூர் கோவில் வீதியில் உள்ள மேற்படி பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர், அங்கிருந்த இக்னேஷியஸ் மீது சரமாரியாகக் கத்தித் தாக்குதல் நடத்தியுள்ளமையுடன் அவரது தலைமுடிகளையும் கத்தியால் அறுத்துக் கொடூரமான முறையில் தாக்குதலை நடத்தியுள்ளார். இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தாக்குதலைத் தடுக்க முயன்ற அந்தப் பெண்ணின் தாயார் மீதும் அந்த இளைஞர் கத்தித் தாக்குதல் நடத்தியுள்ளார். படுகாயமடைந்த தாயார் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலைத் தொடர்ந்து கத்தியுடன் அங்கிருந்து தப்பிய அந்த இளைஞர், அரியாலைப் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவுத் தபால் ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

கொலையுண்ட பெண் சமையல் கலைஞராக வேலை செய்யும் யாழிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில், மேற்படி இளைஞரும் சமையல் கலைஞர் படிப்பை நிறைவு செய்து பயிற்சி சமையல் கலைஞராக வேலை செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களுக்கிடையில் காதல் விவகாரம் இருந்திருக்கலாம் என்றும், அதன் அடிப்படையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம்என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவன் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது உயிரை மாய்த்துள்ள நிலையில், அந்தப் பெண் மறுமணம் செய்யாமல் தனது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் தீவிர சோதனைகளை முன்னெடுத்துள்ளமையுடன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை