ஆஸ்திரேலிய எம்.பி. மீது தாக்குதல்? அரசியல் வன்முறைக்கு எதிராக பிரதமர் எச்சரிக்கை
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது காரை மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், நாட்டின் அரசியல் உரையாடல்களில் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார். விக்டோரியா மாநிலத்தின் வாங்கரட்டா நகரில் அமைந்துள்ள தனது தொகுதி அலுவலகத்துக்கு வெளியே, திங்கட்கிழமை மாலை டொயோட்டா லேண்ட் குரூஸர் வாகனம் மோதியதில் ஹெலன் ஹெய்ன்ஸ் படுகாயமடைந்தார். திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் விமானம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். […]













