ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய எம்.பி. மீது தாக்குதல்? அரசியல் வன்முறைக்கு எதிராக பிரதமர் எச்சரிக்கை

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது காரை மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், நாட்டின் அரசியல் உரையாடல்களில் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது காரை மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், நாட்டின் அரசியல் உரையாடல்களில் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.

விக்டோரியா மாநிலத்தின் வாங்கரட்டா நகரில் அமைந்துள்ள தனது தொகுதி அலுவலகத்துக்கு வெளியே, திங்கட்கிழமை மாலை டொயோட்டா லேண்ட் குரூஸர் வாகனம் மோதியதில் ஹெலன் ஹெய்ன்ஸ் படுகாயமடைந்தார்.

திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் விமானம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக 43 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மக்களுக்கு அறிவித்த பிரதமர் அல்பானீஸ், ஹெலன் ஹெய்ன்ஸ் நேர்மையான மனிதர் என்றும், நாடாளுமன்றத்தில் அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்படுபவர் என்றும், தனது சமூகத்தினரால் பெரிதும் நேசிக்கப்படுபவர் என்றும் குறிப்பிட்டார்.

“ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை. அரசியல் மற்றும் சமூக உரையாடல்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. கூச்சலிடுவது அதிகமாகவும், கருத்துப் பரிமாற்றங்களும் மரியாதையான உரையாடல்களும் குறைவாகவும் காணப்படுகின்றன” என அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் அரசியல்வாதிகள் மற்றும் அரசுப் பதவிகளை வகிப்போருக்கு எதிராக அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தல் தொடர்பான 1,067 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 951 ஆக இருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் டெய்லரும் அரசியல் வன்முறைக்கு எதிராகப் பிரதமருடன் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

“வன்முறைத் தாக்குதல்கள் இயல்பான ஒன்றாகக் கருதப்படும் நாடாக அவுஸ்திரேலியா மாறிவிடக் கூடாது. அரசியல் வன்முறையைப் பொது வாழ்வின் ஓர் அங்கமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி