உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பிரான்ஸ் கலவரங்களுக்கு குடியேற்றக் கொள்கைகளே காரணம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு

பிரான்ஸில் இடம்பெறும் கலவரங்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரான்ஸில் இடம்பெறும் கலவரங்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குடியேற்றம் தொடர்பாகத் தாம் முன்வைத்த எச்சரிக்கைகளை மேக்ரான் கவனத்தில் கொண்டிருந்தால், இத்தகைய வன்முறைகளைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், பிரான்சுக்குப் பெருமளவில் குடியேறிகளை அனுமதிப்பது தவறான முடிவு என்றும், இதனால் பாரிஸ் நகரம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பாரிஸ், லில்லே, நீஸ் உள்ளிட்ட பிரான்சின் பல நகரங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் கடைகள் சூறையாடப்பட்டதுடன், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி