அடுத்தகட்ட மோதல் வெடிக்குமானால், ஈரான் தனது மிக அதிக அழிவுத்திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹோசைன் மொஹெபி எச்சரித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அடுத்த மோதலில் அதிக அழிவுத்திறன் கொண்ட ஆயுதங்களை களமிறக்குவோம்: ஈரான் எச்சரிக்கை

  • August 20, 2026
  • 0 Comments

அடுத்தகட்ட மோதல் வெடிக்குமானால், ஈரான் தனது மிக அதிக அழிவுத்திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹோசைன் மொஹெபி எச்சரித்துள்ளார். ஈரான் அரச ஒளிபரப்பான IRIB இல் வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஊடகமொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஈரான் தொடர்ச்சியாகத் தனது இராணுவ உத்திகளையும் ஆயுத உற்பத்தியையும் மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், “புரட்சிகர காவல் படையின் ஏவுகணைகளில் […]

வெளிநாட்டு ஊடுருவல்களைத் தடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களுக்கு ஈரானின் தீவிரப் பழமைவாத ஆதிக்கம் கொண்ட பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் செய்தி

ஈரானில் வெளிநாட்டு ஊடுருவலைத் தடுக்க புதிய சட்டம்

  • August 20, 2026
  • 0 Comments

வெளிநாட்டு ஊடுருவல்களைத் தடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களுக்கு ஈரானின் தீவிரப் பழமைவாத ஆதிக்கம் கொண்ட பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை நாட்டின் கல்வி, ஊடகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான 12 நாள் போருக்குப் பிறகு, போர்க்கால தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட உளவு எதிர்ப்புச் சட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையிலேயே இந்த புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக […]

சூடானின் கொர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

சூடானில் மீண்டும் போதீவிரமடையும் போர்: 2 லட்சம் மக்கள் புதிதாக இடம்பெயர்வு

  • August 20, 2026
  • 0 Comments

சூடானின் கொர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. அதேவேளை, அப்பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான எல் ஒபெய்ட் (El Obeid) நகரில் உள்ள முக்கிய நீர் மற்றும் மின்சார உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தொடர் ட்ரோன் (Drone) தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அருகிலுள்ள வட டார்புர் (North Darfur) மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பருவகால வெள்ளப்பெருக்கும் இந்த […]

பளையில் புலிகளின் முகாம் இல்லை: விசாரணையில் உறுதி என்கிறார் அமைச்சர் இலங்கை செய்தி

பளையில் புலிகளின் முகாம் இல்லை: விசாரணையில் உறுதி என்கிறார் அமைச்சர்

  • August 20, 2026
  • 0 Comments

கிளிநொச்சி-பளைப் பகுதியில் எல்.டி.டி.ஈ (LTTE) பயிற்சி முகாம் இருப்பதாக வதந்தி பரப்பிய நபர், போலி அடையாள அட்டையை வைத்திருந்ததுடன், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், குறித்த சந்தேக நபரைப் பொரலஸ்கமுவவைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என அடையாளப்படுத்தினார். அவர் தற்போது கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். சந்தேகநபர் […]

புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் அமைக்கப்பட்டிருந்த வெளிப்புறக் கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை டெல்லி அதிகாரிகள் ஜே.சி.பி (JCB) இயந்திரத்தைப் பயன்படுத்தி இடித்து அகற்றியுள்ளனர். இந்தியா செய்தி

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் வெளிப்புறக் கட்டுமானங்கள் இடிப்பு

  • August 20, 2026
  • 0 Comments

புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் அமைக்கப்பட்டிருந்த வெளிப்புறக் கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை டெல்லி அதிகாரிகள் ஜே.சி.பி (JCB) இயந்திரத்தைப் பயன்படுத்தி இடித்து அகற்றியுள்ளனர். தூதரகத்தின் விசா பிரிவிற்கு அருகில் வரிசைகளை முறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த உள்கட்டமைப்புகள், போக்குவரத்துக் கூம்புகள் (traffic bollards) மற்றும் பாதுகாப்பு அரண்கள் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட காட்சிகளில், தூதரகத்தின் வெளிப்புறச் சுவர்கள், உலோக வேலிகள், கூரைகள் மற்றும் கான்கிரீட் பாகங்கள் பலத்த […]

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இந்தியா செய்தி

இந்திய அமைச்சரவையில் மாற்றம்: பாஜக கூட்டணியில் இணையுமா திமுக?

  • August 20, 2026
  • 0 Comments

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. தமிழ்​நாட்​டில் விஜய் தலை​மை​யில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுக​வின் போக்​கில் மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. தொகுதி வரையறை சட்டமூலத்தை கடுமை​யாக எதிர்த்த திமுக, இப்​போது அதற்கு ஆதர​வளிக்க சில நிபந்​தனை​களை விதித்​தது. மேலும் டெல்​லி​யில் மத்​திய உள்​துறை […]

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இலங்கையில் டெங்கு நோயினால் இதுவரை 71 பேர் பலி

  • August 20, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 71 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 19 நாட்களில் 7,777 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 49,290பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய மாகாணத்தில் 8, 409 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,639 பேரும், ஊவா மாகாணத்தில் 2, 605 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா சுருக்கிக் கொண்ட சில நாட்களிலேயே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) இந்த ஆண்டிற்குள் (2026) நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வருட இறுதியில் வடகொரியா ஜனாதிபதியை சந்திக்கிறார் ட்ரம்ப்

  • August 20, 2026
  • 0 Comments

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா சுருக்கிக் கொண்ட சில நாட்களிலேயே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) இந்த ஆண்டிற்குள் (2026) நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார். தமது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கிம் ஜாங் உன்னை ட்ரம்ப் சந்திக்கவுள்ள முதலாவது சந்திப்பு இதுவாகும். “கிம் ஜாங் உன்னை எனக்கு மிகச் நன்றாகத் தெரியும். ஒரு புத்திசாலியான ஜனாதிபதியாக இருக்கும் வரை அவருக்கு […]

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 18 வயதான லிலி ஹூப்பர் (Lily Hooper) என்ற யுவதி மாயமாகி 8 நாட்களாக நடத்தப்பட்டு வந்த தீவிர தேடுதல் வேட்டை சோகத்தில் முடிவடைந்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சோகத்தில் முடிந்த தேடுதல் வேட்டை: ஆஸ்திரேலிய காட்டில் 18 வயது யுவதி சடலமாக மீட்பு

  • August 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 18 வயதான லிலி ஹூப்பர் (Lily Hooper) என்ற யுவதி மாயமாகி 8 நாட்களாக நடத்தப்பட்டு வந்த தீவிர தேடுதல் வேட்டை சோகத்தில் முடிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி சிட்னியிலுள்ள தனது வீட்டிலிருந்து தேசிய பூங்காவிற்கு நடைபயணம் (Bushwalking) சென்ற லிலி ஹூப்பர், இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து, நடாய் தேசிய பூங்காவிலுள்ள (Nattai National Park) […]

உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் இலக்கு வைத்து ரஷ்யா இரவோடிரவாக நடத்திய விண்கணைத் (Missile) தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: 5 பேர் பலி – 23 பேர் காயம்

  • August 20, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் இலக்கு வைத்து ரஷ்யா இரவோடிரவாக நடத்திய விண்கணைத் (Missile) தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த “பாரிய தாக்குதலில்” குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் பலத்த சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர கால சேவைகள் பிரிவு (DSNS) தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதலில் கிய்வ் நகரிலுள்ள […]