இலங்கை செய்தி

அடக்கு முறைகளுக்கு புதிய ஆயுதமா? சர்வதேச மன்னிப்புச் சபை போர்க்கொடி

அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' ஊடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுக் கவலை தெரிவித்துள்ளது.

அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ ஊடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுக் கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சமூகத்துக்குள் மீண்டும் உறுதிப்படுத்தப்படுவதற்கான பாரிய அபாயம் தோன்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:-

“கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஆரம்ப வடிவத்துடன் ஒப்பிடும்போது சில திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளபோதிலும், நீண்டகாலமாக அடக்குமுறையாகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தச் சட்டமூலமும் தொடர்ந்தும் மிக விரிவான மற்றும் தெளிவற்ற பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணங்களைக் கொண்டிருக்கின்றது.

அரசை விமர்சிப்பவர்கள், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரிகளால் அவ்வப்போது ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட இவ்வாறான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவது குறித்து தீவிர கவனமும் பரிசீலனையும் செலுத்தப்பட வேண்டும்.

புதிய சட்டமூலத்தின் ஊடாக நடைபெற வேண்டியது கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிலிருந்து விலகுவதுதானேயன்றி, அதிகாரிகளுக்கு அடக்குமுறைக்காக மேலும் புதிய கருவிகளை வழங்குவதல்ல.” – என்று குறிப்பிட்டுள்ளது.

தடுப்புக் காவல் அதிகாரம் குறித்து மேலும் விவரித்துள்ள அந்த அமைப்பு,

“பயங்கரவாதம் தொடர்பில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகுபவர்களை ஓராண்டு வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கும், வழக்கு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னர் மேலும் ஓராண்டு காலம் தடுப்புக் காவலில் வைப்பதற்கும் இந்தச் சட்டம் அனுமதி வழங்குகின்றது.

இதற்கமைய, வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர்கூட ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் தடுத்து வைத்திருக்க முடியும் என்பதோடு, இது மனித உரிமைகளையும் நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமையையும் கடுமையாக மீறும் செயலாகும்.” – என்று சுட்டிக்காட்டியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை