தாய், மகள் உட்பட மூவரை பலியெடுத்த கோர விபத்து
தெல்கொட, புதிய கண்டி வீதியில் முச்சக்கரவண்டியும் காரும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஏழு வயதுச் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 19) பியகமயவிலிருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, வீதியின் வலது புறத்திற்கு திடீரெனத் திரும்ப முற்பட்டபோதே எதிரே வந்த காரொன்றுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்தின் போது காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உடனடியாக உடுப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]













