GSP+ வரிச்சலுகையை தக்கவைக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தடையாக அமையுமா?
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 13 நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு (Full Bench) முன்னிலையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும் என சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து முதல் 24 மணிநேரத்திற்குள், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. […]













