இந்தியா செய்தி

உக்ரைன், ஈரான் விவகாரத்தில் அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு

இந்தியா மற்றும் போலந்து இடையே பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் புதிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் போலந்து இடையே பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் புதிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி ,

பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் உறவை ஆழப்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், போலந்து நிறுவனங்கள் இந்தியாவுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரு நாடுகளுக்கும் இடையே புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டாம் உலகப் போரின்போது போலந்து மக்களுக்கு இந்தியா வழங்கிய அடைக்கலத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.

உக்ரைனாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, அமைதிக்கான அர்த்தமுள்ள எந்தவொரு முயற்சியையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதுடன், உலகளாவிய அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி