அரசியல் இலங்கை செய்தி

காஞ்சன விஜேசேகரவுக்கு மொட்டு கட்சியில் உயர் பதவி?

காஞ்சன விஜேசேகரவுக்கு மொட்டு கட்சியில் உயர் பதவி?

முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் நிராகரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான காஞ்சன விஜேசேகர கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தார்.

கடந்த பொதுத்தேர்தலிலும் ரணில் சார்பு அணியிலேயே இருந்தார்.

இந்நிலையில் காஞ்சன விஜேசேகர மீண்டும் மொட்டு கட்சி பக்கம் வரவுள்ளார் எனவும், அவருக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என சாகர காரியவசத்திடம் கேள்வி எழுப்பட்டது.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே இந்த கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“ காஞ்சன விஜேசேகர எமது கட்சிக்கு வருவாரானால் மகிழச்சி. அவருடன் நாம் பேச்சு நடத்தினோம், ஆனால் மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் அவரிடம் இல்லை என தெரிவித்தார்.

சிலவேளை மீண்டும் அரசியலுக்கு வந்தால்கூட எமது கட்சிக்கே வருவார்.

எமது கட்சியில் பிரதித் தலைவர் என ஒரு பதவி இல்லை. அதனை உருவாக்குவதாயின் கட்சி யாப்பையும் திருத்த வேண்டும். ஆனால் இவ்வாறு எந்த பேச்சும் நடத்தப்படவில்லை.”- என்றார் சாகர காரியவசம்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை