” என்பிபி அல்ல மக்களே எனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்”
” நாங்கள் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை. விசாரணைகளை எதிர்கொள்வதற்கு பயப்படவும் இல்லை. அதனால்தான் துணிச்சலுடன் நேரில் ஆஜராகியுள்ளோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராவதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: “நான் கைது செய்யப்பட்டு உள்ளே வைக்கப்பட்டாலும் கூட, திட்டமிட்டபடி செப்டம்பர் 12 ஆம் திகதி மக்கள் கூட்டம் நிச்சயமாக நடைபெறும்.
நான் அதில் பங்கேற்காவிட்டாலும் பெருந்திரளான மக்கள் திரள்வார்கள்.
நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. எனவேதான், சுயாதீனமான விசாரணைக்குத் துணிச்சலுடன் முகம்கொடுத்து வருகிறோம். நாங்கள் விசாரணைக்கு அஞ்சவில்லை, அதனால்தான் தைரியமாக வந்திருக்கின்றேன்.
தேசிய மக்கள் சக்தி அல்ல, மக்கள்தான் எனது அரசியலைத் தீர்மானிப்பார்கள்” என்று நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.




