யாழில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி: 157 பேருக்கு கண் பாதிப்பு
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையும் விசேட கண்காணிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளமையுடன், அவர்கள் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா […]













