இந்தியா செய்தி

அபுதாபியில் தவித்த 7 இந்திய மாலுமிகள் மீட்பு: ஏனையோரை மீட்க நடவடிக்கை

அபுதாபியின் 'மினா சயீத்' (Mina Zayed) துறைமுகத்தில் MV Sea Star 2 என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் கடந்த 11 மாதங்களாகச் சிக்கித் தவித்த 7 இந்திய மாலுமிகள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள மாலுமிகளையும் விரைவாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அபுதாபியின் ‘மினா சயீத்’ (Mina Zayed) துறைமுகத்தில் MV Sea Star 2 என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் கடந்த 11 மாதங்களாகச் சிக்கித் தவித்த 7 இந்திய மாலுமிகள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள மாலுமிகளையும் விரைவாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியத் தூதரகம், “சீ ஸ்டார் 2 கப்பலில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகளின் நலன் மற்றும் அவர்களை விரைவில் தாயகம் அனுப்புவது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இந்தியத் தூதரகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே 7 மாலுமிகள் தாயகம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஏனைய மாலுமிகளையும் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளது.

5 மாதங்களாக வழங்கப்படாத சம்பளம்

இந்திய மாலுமிகள் முன்னணி சங்கம் (FSUI) அளித்துள்ள தகவலின்படி, கப்பலில் உள்ள ஏனைய மாலுமிகளுக்குக் கடந்த 5 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை.

மேலும், கப்பலின் உரிமையாளர் முந்தைய ஊதியத்தில் இருந்து விசா மற்றும் பயணச் செலவுகளைப் பிடித்தம் செய்துள்ளதாகவும், மாலுமிகளின் முக்கியமான பயண ஆவணங்கள் துறைமுக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மாலுமிகளுக்கான நிலுவைச் சம்பளத்தைப் பெற்றுத் தருவதோடு, அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம், கப்பல் போக்குவரத்து தலைமை இயக்ககம் மற்றும் சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் (ITF) ஆகியவற்றிடம் FSUI கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மோதலால் அதிகரிக்கும் அச்சம்

ஈரான் மோதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளில் பணியாற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்துக் கவலைகள் அதிகரித்துள்ள சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய மாலுமிகளின் நலனும் பாதுகாப்பும் உயர் முன்னுரிமை பெற்ற விஷயமாகும் என்றும், பிரச்சனைகள் எழும்போதெல்லாம் அது குறித்துச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் புதுடெல்லி பேசி வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி