இந்தியா உலகம் செய்தி

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஈரானுக்கான இந்திய அரிசி ஏற்றுமதி

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான இந்தியா, அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் குறித்த அச்சுறுத்தல்கள் எழுந்தபோதிலும் ஈரானுக்கான தனது அரிசி ஏற்றுமதி பாதிக்கப்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஈரான் – இந்தியா இடையிலான 1.25 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த வர்த்தகத்தில் அரிசி ஏற்றுமதி மட்டுமே சுமார் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது.

மேலும், இந்தியாவின் மொத்த சர்வதேச அரிசி ஏற்றுமதியில் (11.5 பில்லியன் டாலர்) ஈரான் 7 சதவீதத்தைப் பங்காகக் கொண்டுள்ளது.

விலை உயர்வு மற்றும் பல மாதகால போர்ச் சூழலால் ஏற்பட்ட வர்த்தக தடங்கல்களுக்கு மத்தியிலும், உணவுப் பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரானின் அரிசித் தேவை குறையாமல் உள்ளது என அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோதியா தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் வணிகத் தொடர்பில் இருக்கும் நாடுகளுக்குப் பொருளாதாரத் தணிக்கை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளபோதிலும், இந்த வர்த்தகம் எவ்வித தடையுமின்றித் தொடரும் என அஜய் பலோதியா நம்பிக்கை வெளியிட்டார்.

அரிசி மனிதநேய அடிப்படையில் அத்தியாவசியப் பொருளாகக் கருதப்படுவதாலும், ஈரானுக்கு மாற்றுச் சந்தை வாய்ப்புகள் குறைவாக இருப்பதாலும் வர்த்தகம் தொடர வாய்ப்புள்ளது.

கடந்த நிதியாண்டில் ஈரான் 1 மில்லியனுக்கும் அதிகமான தொன் அரிசியை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் அதிகமாகும்.

ஈரானிய வங்கிகளுடன் நேரடியாகப் பணப்பரிவர்த்தனை செய்வதற்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, சீனா மற்றும் சமீபகாலமாக துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள நிதி வழிகள் மூலம் இந்திய வர்த்தகர்கள் செலுத்துகைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக பலோதியா கூறினார்.

இந்த நிதி வழிகள் இதுவரை எவ்வித இடையூறுகளுமின்றி இயங்கி வருகின்றன.

அரிசியைத் தவிர, மருந்துகள், தேயிலை, வாழைப்பழம், தானியங்கள், மாட்டிறைச்சி மற்றும் சில இரசாயனப் பொருட்களையும் இந்தியா ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது.

அதேவேளை, 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க விலக்கு அளிக்கப்பட்ட குறுகிய காலத்தைத் தவிர்த்து, ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி எதையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி