நோர்வேயின் மறைந்த மன்னருக்கு ஐரோப்பிய தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பா செய்தி

மறைந்தாலும் மனங்களில் வாழும் நோர்வே மன்னர்: ஐரோப்பிய தலைவர்கள் புகழஞ்சலி

  • August 28, 2026
  • 0 Comments

நோர்வேயின் மறைந்த மன்னருக்கு ஐரோப்பிய தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ” நாடு முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. நோர்வே நாட்டிற்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தமைக்காக அந்நாட்டு மக்கள் அவருக்கு ஆழ்ந்த நன்றியுணர்வுடன் உள்ளனர்” என்று நோர்வே பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மன்னராக இருந்த ஹரால்ட், நோர்வே மக்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். நம்மிடமும், நமக்கு இடையிலும் உள்ள சிறந்த பண்புகளைக் கண்டறிய அவர் நமக்கு உதவினார்” என்றும் அவர் […]

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை செய்தி

வடக்கு பொருளாதார ரீதியில் வலுவடைய வேண்டும்: ஆளுநர்

  • August 28, 2026
  • 0 Comments

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026 இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், வடக்கு கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. […]

இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதை வலியுறுத்தி, வடக்கு - கிழக்கின் 7 மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் காணி மீட்பு சமர்: யாழில் விசேட கலந்துரையாடல்

  • August 28, 2026
  • 0 Comments

இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதை வலியுறுத்தி, வடக்கு – கிழக்கின் 7 மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. உயர் பாதுகாப்பு வலயம், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கைகள் ஊடாகத் தமது பூர்வீகக் காணிகளை இழந்துள்ள மக்கள், “ஒன்றுபட்ட அமைப்பு” என்ற பொதுவான அமைப்பின் ஊடாகக் கைகோர்த்துச் செயற்படும் நோக்கில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் […]

இமயமலையில் ஏற்பட்ட மண்சரிவினால் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

இமயமலை பேரனர்த்தம்: 93,000 பேர் பாதிப்பு

  • August 28, 2026
  • 0 Comments

இமயமலையில் ஏற்பட்ட மண்சரிவினால் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதேவேளை, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நிவாரணப் பணி அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். “குறைந்தது 93,000 மக்கள் பாதிக்கப்பட்டு, பெரும் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இரண்டாம் கட்ட வெள்ளப்பெருக்கு குறித்து நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம்” என நேபாளத்திற்கான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் […]

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியின் தாக்கம் போதுமானதாக இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கை செய்தி

எதிரணி வலுவாகவே உள்ளது: சஜித் சூளுரை

  • August 28, 2026
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியின் தாக்கம் போதுமானதாக இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பண்டாரவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு , ” கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அஞ்சியவர்களே, எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் குறித்து தவறான கருத்துகளை பரப்புகின்றனர். மேலும் ஆளுங்கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே சில அரசியல் முகவர்கள் இப்படியான கருத்துகளை முன்வைக்கின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி மிகவும் […]

நோர்வே மன்னர் 5ஆம் ஹாரால்ட் (King Harald V), தனது 89ஆவது வயதில் காலமானார். ஐரோப்பா செய்தி

நோர்வே மன்னர் King Harald V காலமானார்

  • August 28, 2026
  • 0 Comments

நோர்வே மன்னர் 5ஆம் ஹாரால்ட் (King Harald V), தனது 89ஆவது வயதில் காலமானார். ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 06:35 மணிக்கு அவர் அமைதியான முறையில் உயிர்நீத்ததாக ஒஸ்லோவிலுள்ள அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரண்மனை கூரையில் பறந்த அரசக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மன்னரின் மறைவுக்கு முந்தைய 24 மணிநேரத்தில், ராஜ குடும்ப உறுப்பினர்கள் அவரைச் நேரில் சென்று பார்த்ததுடன், பெருந்திரளான மக்கள் அரண்மனைக்கு வெளியே மலர்களை […]

இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் 'இந்தியா டுடே - சி வோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆப் தி நேஷன்' (Mood of the Nation) கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றித் கழகத்தின் தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? கருத்து கணிப்பில் விஜய் முன்னிலை

  • August 28, 2026
  • 0 Comments

இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆப் தி நேஷன்’ (Mood of the Nation) கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றித் கழகத்தின் தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, தேசிய அரசியலில் பல […]

சீன, ரஷ்ய ஜனாதிபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி இந்தியா செய்தி

சீன, ரஷ்ய ஜனாதிபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

  • August 28, 2026
  • 0 Comments

ஆகஸ்ட் 31-ம் திகதி கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நடை​பெறும் எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங்கை அவர் சந்​தித்​துப் பேசு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பிரதமர் நரேந்​திர மோடி நாளை உஸ்​பெகிஸ்​தான் தலைநகர் தாஷ்கண்ட் செல்​கிறார். அங்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஷவ்​கத் மிர்சியோயேவை அவர் சந்​தித்​துப் பேசுகிறார். அப்​போது வர்த்தகம், முதலீடு, பாது​காப்​பு, டிஜிட்​டல் தொழில்​நுட்​பம், எரிசக்தி, கல்வி ஆகிய துறை​களில் […]

வாஷிங்டன் தனது கவனத்தை தனது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சவால்கள் பக்கம் திருப்புவதால், ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என்று நேட்டோ (NATO) அமைப்பிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு பென்டகன் வியாழக்கிழமை அழுத்தம் கொடுத்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பாவின் பாதுகாப்பை பொறுப்பேற்கவும்: நேட்டோ நாடுகளுக்கு பென்டகன் அழுத்தம்

  • August 28, 2026
  • 0 Comments

வாஷிங்டன் தனது கவனத்தை தனது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சவால்கள் பக்கம் திருப்புவதால், ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என்று நேட்டோ (NATO) அமைப்பிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு பென்டகன் வியாழக்கிழமை அழுத்தம் கொடுத்துள்ளது. ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா ஏற்கனவே தொடங்கியுள்ளது. தற்போதும் அங்கு சுமார் 80,000 வீரா்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்தப் படைக்குறைப்பை எந்த அளவிற்கு ஆழமாகக் கொண்டுசெல்ல […]

நவீனமயப்படுத்தப்படும் யாழ்.கொழும்புத்துறை இறங்குதுறை குறித்து அமைச்சர் ஆராய்வு இலங்கை செய்தி

நவீனமயப்படுத்தப்படும் யாழ்.கொழும்புத்துறை இறங்குதுறை குறித்து அமைச்சர் ஆராய்வு

  • August 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். கடற்றொழிலாளர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, இறங்குதுறை வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்கால கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்தார். இத்திட்டத்திற்காக ரூ.205 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நிறைவடையும் […]