பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவி ரத்து
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற, ஆளுகை, நீதி மற்றும் பொமக்கள் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்துள்ளது. 2009-ஆம் ஆண்டின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டம், எண் 35-ஐ ரத்து செய்வதற்காக இந்த சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, ஆயுதப் படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டம் 2009-ல் இயற்றப்பட்டது. இருப்பினும், நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முப்படைகளின் […]













