உலகம்

பயணிகள் படகில் தீவிபத்து – 05 பேர் பலி, 80 பேர் மாயம்

பிலிப்பைன்ஸின் பலவான் தீவுப் பகுதிக்கு அப்பால் பயணித்த படகொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படை இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பலவானின் கோரான் (Coron) பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ (MV June Aster) என்ற படகில்  தீவிபத்து ஏற்படதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் பயணித்ததாகவும், அவர்களில் 43 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மீட்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 80-க்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் இல்லை என்றும், மீட்புப் பணிகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்