மொரட்டுவவில் முச்சக்கர வண்டி ஓட்டுநரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு
60 people died in 114 shooting incidents in Sri Lanka last year
மொரட்டுவை, ரவத்தவத்தை பகுதியிலுள்ள இம்மானுவேல் மாவத்தையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் எவ்விதப் பாதிப்புமின்றி தப்பியதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் மொரட்டுவை மாநகர சபையில் பணிபுரியும் அங்குலானை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




