போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள புட்டின் இணக்கம்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய ரஷ்யத் தலைவர் விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியதாக கூறியுள்ள ட்ரம்ப், இந்த தகவலை வெளியிட்டார்.
டல்லாஸ் நகருக்குச் செல்லும் வகையில் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்தில் ஏறுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், அவர் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய விரும்புகிறார்.
அதேபோல உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் ஒப்பந்தம் செய்ய விரும்பினால், அது மிகவும் நன்றாக இருக்கும்,” என்று கூறினார்.
அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கீவ் மற்றும் மொஸ்கோவிற்கு பயணம் செய்த திரும்பியவுடன் ட்ரம்ப் புட்டினுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான முன்மொழிவுகள் குறித்து விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.




