உலகம் முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அனுப்பப்படும் சரக்குகளுக்கு சுங்கக் கட்டணம் விதிப்பு

  • July 13, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அனுப்பப்படும் அனைத்து சரக்குகளுக்கும் அமெரிக்கா 20 சதவீதம் சுங்கக் கட்டணம் விதிக்கும் என  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்காவை ‘ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலர்’ என்று அறிவித்ததோடு, இந்த சுங்கக் கட்டணம் ஒரு ஈடுசெய்தலாகச் செயல்படும் என்றும் கூறினார். மேலும், ஈரானியக் கப்பல்களோ அல்லது வாடிக்கையாளர்களோ ஜலசந்திக்குள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கும் வகையில், ‘ஈரானிய முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவதாகவும்’ அவர் குறிப்பிட்டுள்ளார். பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய […]

உலகம்

ஹார்மூஸ் ஜலசந்திப் பாதையில் அமெரிக்க படைகள் : பயணத்தை தொடர அறிவுரை

  • July 12, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) ஹார்மூஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) குறித்த நீர்வழிப் பாதை திறந்தே உள்ளதாக தெரிவித்துள்ளது. “சர்வதேச நீர்வழியைச் சட்டப்பூர்வமாகக் கடக்க விரும்பும் அனைத்துக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது,” என்று CENTCOM தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், “நியாயமற்ற ஈரானிய ஆக்கிரமிப்பு, துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் தன்னிச்சையான அறிவிப்புகள் இருந்தபோதிலும், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் தொடர்ந்து கிடைப்பதை […]

உலகம்

ஹோர்மூஸ் ஜலசந்தியில் மற்றொரு கப்பல் மீது ஈரான் தாக்குதல்

  • July 12, 2026
  • 0 Comments

ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக பயணித்த மற்றொரு கப்பலைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஈரான் குறித்த பாதையை மூடியுள்ள நிலையில், அறிவிப்புகளை மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கமைய சைப்ரஸ் கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் – ஈரானுக்கு 24 மணிநேரம் கெடு

  • July 11, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவும், அனைத்து கப்பல் வழித்தடங்களும் சுங்கக் கட்டணமின்றி திறந்திருப்பதை உறுதி செய்யவும் ஈரான் 24 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக உறுதியளிக்க வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. ஈரான் இணங்கத் தவறினால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் செய்தியை நேரடியாகவும் பிராந்திய மத்தியஸ்தர்கள் மூலமாகவும்  தெரிவித்துள்ளது. முன்னதாக ஹோர்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதாகவும், அந்த நீர்வழியைக் கடக்க முயற்சிக்கும் வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்படாது என்றும் அமெரிக்கா […]

உலகம்

ஹோர்மூஸ் ஜலசந்தி விவகாரம் – அரபு நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் நேட்டோ குழுவினர்

  • July 7, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதில் நிலவும் முட்டுக்கட்டை குறித்து விவாதிப்பதற்காக, நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் இன்று வளைகுடா அரபு நாடுகளின் அமைச்சர்களைச் சந்திக்க உள்ளனர். அமெரிக்கா-ஈரான் இடையே ஒரு இடைக்கால அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியில் பல வாரங்களாக பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பதற்றங்களை தணிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் அமைச்சர்களை நேட்டோ தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் : திரும்பிச் சென்ற கப்பல்கள்

  • July 5, 2026
  • 0 Comments

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது சிக்கலாகியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் ஓமன் கடற்கரையை ஒட்டி ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற கப்பல்கள் திடீரெனத் திரும்பிச் சென்றதாக, கண்காணிப்புத் தரவுகளை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. வாகனங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், எண்ணெய் டேங்கர்கள் மற்றும் மொத்த சரக்குக் கப்பல்கள் உள்ளிட்ட சில கப்பல்கள் தொடர்ச்சியாகத் திடீரெனத் திரும்பிச் சென்ற வேளையில், வேறு பல கப்பல்கள் […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் – அராக்சி உறுதி

  • June 28, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தி அடுத்த 30 நாட்களுக்கு முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்திக்கு ஏற்படும் எந்தவொரு சவாலும் ‘பதட்டங்களை அதிகரிக்கும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார். அனைத்து தடைகளும் அகற்றப்பட்ட பிறகு, அந்த நீர்வழியின் முழு கொள்ளளவும் மீட்டெடுக்கப்படும். இதற்காகத்தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று அப்பாஸ் அராக்சி மேலும் கூறியுள்ளார். “இந்தப் பொறுப்பு ஈரான் இஸ்லாமியக் குடியரசையே சாரும். இந்த விஷயத்தில் வேறு எந்தக் கட்சிக்கோ […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி பாதிப்பு – மாலுமிகளுக்கு எச்சரிக்கை

  • June 27, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, UKMTO கடல்சார் முகமை அப்பகுதியில் நிலவும் அச்சுறுத்தல் அளவை கணிசமாக உயர்த்தியுள்ளது. குறித்த கடற்பகுதியில் கண்ணிவெடிகள் இருப்பதாக UKMTO மாலுமிகளை எச்சரித்துள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்வதால், கடற்படையினரின் இருப்பை அவர்கள் எதிர்பார்க்க வேண்டும் என்றும் போக்குவரத்து பாதை நெரிசல் மிக்கதாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதட்டங்களின் மையமாக இருந்து வருகிறது. இதற்கிடையே அப்பகுதின் ஆதிகத்தை தக்கவைத்துக் கொள்ள ஈரான் […]

உலகம்

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : ஹோர்மூஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த கப்பல்கள்!

  • May 20, 2026
  • 0 Comments

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் “இறுதிக் கட்டத்தில்” இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஹோர்மூஸ் ஜலசந்தியை  03 எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பதாக கடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனக் கப்பல்களுக்கான விதிகளைத் தளர்த்துவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் எட்டியதைத் தொடர்ந்து, சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான சீன எண்ணெய்க் கப்பல்கள்  ஜலசந்தியில்  இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. சீனக் கப்பல்களுடன் இணைந்து கொரிய […]

உலகம்

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக சீனாவின் 30 கப்பல்கள் செல்ல ஒப்புதல்!

  • May 14, 2026
  • 0 Comments

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீனாவின் 30 கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியை ராணுவமயமாக்கும் ட்ரம்பின் திட்டத்திற்கு சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங்  எதிர்ப்பு தெரிவித்ததை வரவேற்கும் முகமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் திறந்தே உள்ளது. ஆனால், இந்நீர்வழி வழியாகச் செல்லும்போது அவை ஈரானிய கடற்படைப் படைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.