ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக சீனாவின் 30 கப்பல்கள் செல்ல ஒப்புதல்!
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீனாவின் 30 கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியை ராணுவமயமாக்கும் ட்ரம்பின் திட்டத்திற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எதிர்ப்பு தெரிவித்ததை வரவேற்கும் முகமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் திறந்தே உள்ளது.
ஆனால், இந்நீர்வழி வழியாகச் செல்லும்போது அவை ஈரானிய கடற்படைப் படைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




