உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி பாதிப்பு – மாலுமிகளுக்கு எச்சரிக்கை

ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, UKMTO கடல்சார் முகமை அப்பகுதியில் நிலவும் அச்சுறுத்தல் அளவை கணிசமாக உயர்த்தியுள்ளது.

குறித்த கடற்பகுதியில் கண்ணிவெடிகள் இருப்பதாக UKMTO மாலுமிகளை எச்சரித்துள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்வதால், கடற்படையினரின் இருப்பை அவர்கள் எதிர்பார்க்க வேண்டும் என்றும் போக்குவரத்து பாதை நெரிசல் மிக்கதாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தி, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதட்டங்களின் மையமாக இருந்து வருகிறது.

இதற்கிடையே அப்பகுதின் ஆதிகத்தை தக்கவைத்துக் கொள்ள ஈரான் விரும்புகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்