ஹோர்மூஸ் ஜலசந்தியில் மற்றொரு கப்பல் மீது ஈரான் தாக்குதல்
ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக பயணித்த மற்றொரு கப்பலைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஈரான் குறித்த பாதையை மூடியுள்ள நிலையில், அறிவிப்புகளை மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதற்கமைய சைப்ரஸ் கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




