இலங்கையர்களுக்கான சுற்றுலா விசாவை நிறுத்தியது தாய்வான்
இலங்கையை சேர்ந்தவர்களின் சுற்றுலா நுழைவிசைவு விண்ணப்பங்களை தாய்வான் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்வான் அரசாங்கத்தின் அண்மைய நுழைவிசைவு கொள்கையின்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை குடிமக்களிடமிருந்து சுற்றுலா விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்வான் அரசாங்க நிறுவனத்தின் அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் பயணம் மேற்கொள்வது, பரிமாற்ற நடவடிக்கைகள், உறவினர்களை (மூன்றாம் நிலை உறவுமுறைக்குள்) சந்திப்பது, வணிகம், தாய்வானில் ஒரு கப்பலில் இணைவது அல்லது மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக […]













