துருப்புக்களுக்கு பற்றாக்குறை – 10 இலட்சம் வீரர்களை அணிதிரட்டுமாறு புட்டினிடம் வலியுறுத்தல்
போர்களத்தில் துருப்புக்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 லட்சம் வீரர்களைக் கட்டாய ராணுவச் சேவையில் ஈடுபடுத்துமாறு விளாடிமிர் புடினின் தளபதிகள் அவரை வலியுறுத்தி வருகின்றனர்.
2028-ஆம் ஆண்டிற்குள் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்வதற்கான வளங்கள் ரஷ்யத் தலைவரிடம் இல்லாமல் போய்விடும் என்று உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஓலெக் இவாஷ்செங்கோ தெரிவித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அந்த அதிகாரி, ரஷ்யா தற்போது நாளொன்றுக்கு சுமார் 1,000 பேரை ராணுவத்தில் சேர்த்து வருகிறது. இருப்பினும் போரில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இந்த அளவை விட அதிகமாக இருப்பதால், இந்த ஆள் சேர்ப்பு நடவடிக்கை போதுமானதாக இல்லை.
“அடுத்த ஓராண்டுக்குத் தேவையான ராணுவ மற்றும் பொருளாதார வளங்கள் ரஷ்யாவிடம் உள்ளன; ஆனால் 2028-ஆம் ஆண்டில் அவை தீர்ந்துவிடும் என்று நாங்கள் கணிக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் நடைபெறவுள்ள நாடு தழுவிய தேர்தல்களுக்குப் பிறகு, கூடுதலாக 8 லட்சம் (800,000) வீரர்களை முழு அளவில் அணிதிரட்டுமாறு அதிபர் புடினிடம் அவரது தளபதிகள் வலியுறுத்தியுள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் இவாஷ்சென்கோவின் உளவுத் தகவல் தெரிவிக்கிறது.
இருப்பினும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வீரர்களை அணிதிரட்டும் நடவடிக்கை நடைமுறைக்கு வராமலும் போகலாம்.
“உண்மையில், ஒரே நேரத்தில் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான புதிய வீரர்களை மட்டுமே ராணுவத்தால் உள்வாங்கிக்கொள்ள முடியும் — அதாவது அவர்களை அணிதிரட்டுதல், உபகரணங்கள் வழங்குதல், உணவு மற்றும் பயிற்சி அளித்தல் மற்றும் படையில் இணைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்ய முடியும்,” என்று அந்த உளவுத்துறைத் தலைவர் கூறினார்.




