இலங்கை செய்தி

மிக் கொள்வனவு மோசடி: கோட்டாபயவிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் FCID இன்று முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் FCID இன்று முன்னிலையாகியுள்ளார்.

இலங்கை விமானப்படைக்கு மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகள் குறித்து, வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய அவர் இன்று காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

அதேவேளை, மிக் போர் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலகவிடமும் நேற்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணை நடத்தப்பட்டது.

அவரிடம் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை