ஐரோப்பா

பெர்லினில் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 07 பேர் மீது குற்றச்சாட்டு

பெர்லினில் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் ஏழுபேர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

வழக்குறைஞர்கள் இன்று முன்வைத்த குற்றச்சாட்டில்  07 பேரும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்ததாகவும், ஆயுதங்களைக் கொள்முதல் செய்வது உட்பட தாக்குதலுக்குத் தயாரானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களின் உத்தரவின் பேரில் அந்த நபர்கள் செயல்பட்டதாகவும், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 அக்டோபர் தொடக்கத்தில் ஜெர்மனி அல்லது ஆஸ்திரியாவில் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்காக தானியங்கி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலியப் பிரதிநிதிகள், யூதர்கள் அல்லது இஸ்ரேலுக்கு ஆதரவான நபர்களைக் குறிவைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததாகவும் வழக்குறைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த ஏழு பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்கள் நடந்ததிலிருந்து, ஜெர்மனியில் உள்ள யூதர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுமாறு பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளதாக ஜெர்மன் பாதுகாப்புப் படைகள் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்