இந்தியா செய்தி தமிழ்நாடு

முதலீடுகள் குறிவைப்பு: லண்டன் வந்தார் முதல்வர் விஜய்

தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். இவ்வியத்தின்போது லண்டனிலுள்ள தமிழர்களை முதல்வர் சந்திப்பார் எனக் கூறப்படுகின்றது.

தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். இவ்வியத்தின்போது லண்டனிலுள்ள தமிழர்களை முதல்வர் சந்திப்பார் எனக் கூறப்படுகின்றது.

நேற்று இரவு 10 மணி அளவில் சென்​னை​யில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற முதல்​வர், அங்​கிருந்து மற்​றொரு விமானத்​தில் லண்​டன் சென்​றார்.

லண்​டனில் முதலீட்​டாளர்​கள் சந்​திப்​பில் பங்​கேற்​கும் முதல்​வர் விஜய், பல்​வேறு தொழில் நிறு​வனங்​களின் பிர​தி​நி​தி​களைச் சந்​தித்​து, தமி​ழ​கத்​தில் தொழில் தொடங்க வரு​மாறு அழைப்பு விடுக்க உள்​ளார்.

லண்​டனில் உள்ள புகழ்​பெற்ற ‘சில்​வர்​ஸ்​டோன் மோட்​டார் ரேஸிங் சர்க்​யூட்’ வசதி​கள் மற்​றும் அதற்​கான சுற்​றுப்​பாதையை​யும் முதல்​வர் பார்​வை​யிட உள்​ளார்.

அப்​போது, தனது நண்​பர் நடிகர் அஜித்​கு​மாரின் கார் பந்​த​யத்தை முதல்​வர் பார்​வை​யிட இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. லண்​டனில் வசிக்​கும் தமி​ழர்​களைச் சந்​தித்​தும் முதல்​வர் கலந்​துரை​யாட உள்​ளார்.

இப்​பயணத்​துக்​கான முன்​னேற்​பாடு​களை மேற்​கொள்​வதற்​காக அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, தொழில் துறை வழி​காட்டி நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் தீபக் ஜேக்​கப் மற்​றும் உயர் அதி​காரி​கள் ஏற்​கெனவே லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றுள்​ளனர்.

லண்​டன் பயணத்தை முடித்​துக் கொண்டு முதல்​வர் விஜய் செப்​.17-ம் திகதி காலை துபாய் வழி​யாக சென்னை திரும்ப உள்​ள​தாக கூறப்படுகிறது.

சென்னை விமான நிலை​யத்​தில் விவிஐபிக்கள் மட்டுமே செல்லும் 6-வது நுழைவு​வா​யில் வழி​யாக முதல்​வருடன் அவரது நெருங்​கிய நண்​பர் விஷ்ணு ரெட்​டி செல்ல பாது​காப்பு அதி​காரி​கள் நேற்று அனுமதி மறுத்தனர்.

இதனால், முதல்​வர் விஜய்​யும் விவிஐபி நுழைவு​வா​யிலை தவிர்த்து, பயணி​யர் முனைய​மான டெர்​மினல் 2-ல் டி-9 நுழைவு​வா​யில் வழி​யாக உள்ளே சென்றார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி