டெல்லியில் களமிறங்கினார் புடின்: மோடியுடன் இன்று முக்கிய பேச்சு
பாதுகாப்பு, சக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்குமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை (11) டெல்லி வந்தடைந்துள்ளார்.
பிரதமர் மோடியும் புடினும் கடந்த வாரம் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் இடையே கடைசியாகச் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் மோதலைக் குறிப்பிட்டு, “முடிவில்லாத போரிலிருந்து போரின் முடிவை நோக்கி” ரஷ்ய தலைவர் நகர வேண்டும் என்று இந்தியப் பிரதமர் வலியுறுத்தினார்.
“நாம் ‘முடிவில்லாத போர்’ என்ற சூழ்நிலையிலிருந்து ‘போரின் முடிவு’ என்பதை நோக்கி நகர வேண்டும்… இந்தப் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மனிதகுலத்தின் விருப்பமாகும்” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இச்சந்திப்பில், பிரம்மோஸ் ஏவுகணை மேம்பாடுகள் போன்ற பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட இரு நாடுகளுக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சிவில் அணு உலைகளை அமைப்பதற்கான இந்தியாவின் திட்டம் குறித்தும் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் கூறினார்.
புதுடெல்லி நடத்தும் இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் புடின் பங்கேற்பார்.




