இந்தோனேசிய காட்டுத்தீயால் பரவும் அடர் புகை: மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாகப் பரவியுள்ள அடர் புகை மூட்டம் (Haze), காற்று மாசுபாட்டை அபாயகரமான நிலைக்கு உயர்த்தியதை அடுத்து , மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. “பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் காற்று மாசுபாடு உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சரவாக் மாநிலத்தின் செரியான் (Serian) பிரிவு முழுவதிலும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த மன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்” எனப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் […]













