ஈரான், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்கள் ஐ.நா. தொடரில் சந்திப்பு
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு(UNGA) மத்தியில்
, பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ‘ (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இரு நாட்டு அதிகாரிகளும் இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடியதுடன், பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்கள் தொடர்பாகவும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது, “பிராந்திய அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்துவதற்குப் பேச்சுவார்த்தை, இராஜதந்திர அணுகுமுறை மற்றும் தொடர்ச்சியான ஈடுபாடு ஆகியவை மிகவும் அவசியமானவை” என்பதை இஷாக் தார் சுட்டிக்காட்டினார்.
மேலும், இரு தரப்பினரும் தொடர்ச்சியாக நெருங்கிய தொடர்பில் இருக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




