யாழில் காணி விடுவிப்பில் இழுத்தடிப்பு?
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கப்பட்ட போதிலும், கணிசமான கோரிக்கைகளை இராணுவம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள். காணி விடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஏனைய […]













