ஹார்முஸ் நீரிணை: வரி விதிப்பிலிருந்து பின்வாங்கினார் ட்ரம்ப்
ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, தான் ஏற்கனவே அறிவித்திருந்த 20 சதவீத வரி (Tariff) விதிப்பிலிருந்து அவர் தற்போது பின்வாங்கியுள்ளார்.
“ஹார்முஸ் நீரிணையானது ஈரான் தவிர்ந்த அனைத்துக் கப்பல் போக்குவரத்திற்கும் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஈரானின் பொய் பேசும், வன்முறையான மற்றும் தீங்கிழைக்கும் தலைமையே இதற்குக் காரணம்.
இந்தத் தலைமை அந்த நாட்டை முழுமையான அழிவை நோக்கிய பாதையில் கொண்டு செல்கிறது” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த 20 சதவீத வரி விதிப்புக்கு பதிலாக, வளைகுடா நாடுகளுடனான “வர்த்தகம் மற்றும் முதலீட்டு” ஒப்பந்தங்களை தான் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.




