பிரான்ஸ் செல்ல அநுரவுக்கு விசா நிராகரிப்பா? அரசு மறுப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிரான்சுக்கான உத்தியோகபூர்வ விஜயம், விசா பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
“ பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான ராஜநத்திர ரீதியிலான பேச்சுகளைத் தொடர்ந்து ஜனாதிபதியின் விஜயத்திற்கான திகதிகள் நிர்ணயிக்கப்படும்.” எனவும் அவர் கூறினார்.
அமைச்சரை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“ சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் எப்போதும் நம்பகமானவை அல்ல. இவ்வாறான பதிவுகளை யார் உருவாக்குகிறார்கள் மற்றும் பகிர்கிறார்கள் என்பதை ஆராய்ந்தே அவற்றை நம்ப வேண்டும். “ எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


